லக்கிக்கு ஒரு பகிரங்க கடிதம்

அன்பு லக்கி.,

எப்போவாவது நீங்கள் போதையில் பதிவு எழுவது ஓகே. எப்பொழுதும் என்றால் ஜீரணிப்பது சற்று கடினம் தான் . ஈழம் தொடர்பான கருத்துகளில் நீங்கள் எந்த ஒரு இயக்கத்தின் அடிவருடியாகவும் இருங்கள் . அது உங்கள் சொந்த விருப்பம் . பெரும்பான்மையான பதிவர்களின் கருத்தை கொச்சைபடுத்த உங்களுக்கு அருகதை இல்லை .

இங்கு யாரும் உங்களைப்போன்று இயக்கம் சார்ந்த கருத்துகளை வழிமொழிவதும் இல்லை. எந்த ஒரு கட்சிக்கும் சட்டி தூக்குபவர்களும் இல்லை. அய்யா ஆட்சியில் இல்லாமல் அம்மா இருந்திருந்தால் இதைவிட அதிகமாகவே இந்த காமெடியன்கள் பதிவும் பின்னூட்டமும் போட்டிருப்பார்கள்.

அதிகார வர்க்கத்தினரை எதிர்த்துதான் இங்கு பதிவும், போராட்டமே தவிர எந்த ஒரு வயது முதிர்ந்த கிழவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ எதிர்த்து அல்ல. இன்று உன்னால் என்னசெய்ய முடிந்ததோ அதை சிறிது காலத்திற்கு முன்பு செய்திருந்தால் குறைந்தபட்ச சில ஆயிரம் மக்களையும் அவர்களின் ஒன்றுமறியா சிறு குழந்தைகளையும் பலியிடுவதை தடுத்திருக்கலாம். சைடு டிஷ் ஆக நீங்கள் தொடும் ஊறுகாய் அளவிற்கு உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் தடுத்திருக்கலாமா இல்லையா..?

சாதி, சாதி அலை, அபிமான சாதித்தலைவர் என்று வலைப்பதிவர்கள் மத்தியில் கதைப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். சாதி என்ற வார்த்தையை பயன்படுத்துவதையே ஈனச் செயலாக கருதுகிறேன். இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி உங்களை மேலும் தாழ்த்தி கொள்ளாதீர்கள்.

கடந்த மூன்று வருடங்களாக எங்களை கவனித்து வந்ததெல்லாம் போதும். கடந்த மூன்று மாதங்களாக வன்னியிலும் , யாழ்ப்பாணத்திலும் நடந்ததை கவனித்தீர்கள் என்றால் இப்படி போதையில் பிதற்றமாட்டீர்கள்.

கலைஞரை எதிர்த்தவர்கள் எல்லோரும் ‘ஜெ.வுக்கு தான் ஓட்டு’ போடுவார்கள் என்றோ, 'ஜெ.வுக்கு தான் ஆதரவளிக்கிறார்கள்' என்றோ நீங்கள் எண்ணினால் ''நீங்க கொஞ்சம் வளரணும் தம்பி''. எந்த செல்வியும் யாருக்கும் நாயகியாக தெரிகிறாரோ இல்லியோ... இங்கே உள்ள நாயகன் பலருக்கும் காமெடியனாக அல்லவா தெரிகிறார். மருத்துவர் அய்யாவைப்பற்றி குறிப்பிட்டு உங்களுக்கு பதிலளித்துகொண்டிருக்கும் இந்த பாவத்திற்கு மேற்கொண்டு மேலும் பாவம் சேர்க்க விரும்பவில்லை.

எந்த ஒரு உண்மையான தமிழனுக்கும் இருக்கக்கூடிய உள்மன ஆசை ஈழத்தில் அமைதி பிறக்கவேண்டும் என்பது மட்டும்தான்.

போர்நிறுத்தம் என்பது ஈழத்தமிழனுக்கும், அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் கிடைத்த வெற்றி என்றோ, இல்லை வேறு எவருக்கோ கிடைத்த வெற்றி என்றோ மடத்தனமாக உளற எவரும் தயாராக இல்லை. உண்மையில் போர்நிறுத்தம் என்பது வெறும் கண்துடைப்பு . ஏறத்தாழ தமிழீழ மொத்த மக்களும் போரின் அகோரப்பிடியில் சிக்கி நசுக்கப்பட்டுள்ளர்கள். இன்னும் ராணுவத்தின் பிடியில் உள்ள மக்கள் கடுமையான சித்திரவதைக்கும், வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

செஞ்சிலுவை சங்கத்தினரை கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்ப மறுக்கும் இலங்கை அரசின் போர்நிறுத்தம் இந்திய அரசின் தேர்தலை வைத்து பின்னப்பட்டிருக்கும் மாயவலையாககூட இருக்கலாம்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைப்பற்றிய இந்நேரத்து உங்களது விமர்சனம் ஒரு தேர்ந்த இந்திய அரசியல்வாதியினுடையது. இதற்கு மேலும் உங்களைப்பற்றி உயர்வாக கூற ஏதும் இல்லையென நினைக்கிறேன். மே 16 ன் முடிவுகள் எப்படியிருப்பினும் என்மக்களை காப்பற்ற எவரும் முன்வரப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

எனது இந்த சிறிய விளக்கத்திற்கு நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்ட 'பெரும்பான்மையான' வலைப்பதிவர்களின் - என்ற சொல்லும் காரணமாக இருக்கலாம்.

முழு நேர கொ.ப.செ ஆக இருப்பதை தவிர்த்து சிறிதுநேரம் உருப்படியான விசயங்களில் கவனம் செலுத்துவது அனைவரது நேரவிரயங்களை தவிர்க்கும் என்பது லக்கிக்கு எனது தாழ்மையான விண்ணப்பம்.

பி.கு : 1. நிறைய தண்ணீர் (நீங்கள் வழக்கமாக அருந்தும் தண்ணீர் அல்ல..) குடிப்பதும் ,
2. ஒரு பெரிய எலுமிச்சை பழத்தை அவ்வப்போது தலையில் தேய்த்து கொள்வதும் இந்த கோடையில் ஏற்படும் கடும் சூட்டை தவிர்க்க பயன்படும் .

தோழமையுடன் ,
வசந்த் ஆதிமூலம் .


Links to this post

Read Users' Comments ( 9 )

பதிவர் சந்திப்பு - அறிமுகம்.

சனிக்கிழமை மாலை (25/04/09) மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடைபெற்ற மாபெரும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும்படி ஆஸிப் அண்ணாச்சியும், செல்வாவும் மற்றும் இதர நண்பர்களும் வற்புறுத்தி அழைத்ததால் ஆன் த வேயில் ஒரு ஹாய் சொல்லிவிட்டு செல்லலாம் என முடிவுசெய்து வண்டியை திருப்பினேன்.

தூரத்தில் நான் வருவதை பார்த்தவுடன் அண்ணாச்சி முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அருகில் சென்றவுடன் கட்டியணைத்து மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார் '' இவன் என் தளபதி ...'' என்று . நான் எதுவும் பேசவில்லை. சிரித்துக்கொண்டே நின்றிருந்தேன். (அவையடக்கம்...!). போதாதென்று செல்வேந்திரன் வேறு பிடித்த கையை விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். நந்தா அண்ணாவின் ஸ்பெஷல் அன்புக்கு என்ன கைம்மாறு செய்யபோறேன்னு தெரியலையப்பா தெரியலியே....

கார்க்கி, லக்கி, நரசிம், அப்புறம் cable சங்கர் இப்படி அண்ணன்மார் அன்புல திக்குமுக்காடி தெவங்கி போனேன். முதல் முறையா போறோமே.. கிறுக்க ஆரம்பிச்சு ரெண்டு மாசம் தானே ஆறது... என்று பயந்து போயி இருந்த எனக்கு நெறைய நம்பிக்கையும், பாசத்தையும் கொடுத்து அள்ளி அணைச்சுகிட்ட அத்தனை அண்ணன்களுக்கும் கண்ணீரோடு நன்றி சொல்றேன் . (டாய் போதும்டா... நிறுத்திக்கோ...)

- அத்தனையும் உண்மை இல்லேன்னாலும், தயங்கி தயங்கி உள்ள வந்த நம்மளுக்கு ஆதரவு கொடுத்த அண்ணாச்சி, செல்வேந்திரன், நந்தா, cable சங்கர் மற்ற எல்லா நண்பர்களுக்கும் நன்றி. துணை நின்ற ஆனந்தா-வுக்கு (தமிழ் ஊடகம்) வாழ்த்துகளும் நன்றிகளும்.

பி.கு : என்னை நல்லவன்னு நம்பி ஆஸிப் அண்ணாச்சி கொடுத்த ஒரு சில டிப்ஸ் ஐ பின்பற்றுவதா முடிவு பண்ணிட்டேன் ( உருப்படுறதுக்கு வழியே இல்லை...). முன்னோர்கள் (...!!!!??) ஆசியோடு உங்களை இம்சை பண்றதுல எந்த குறையும் வைக்க மாட்டேன்னு நம்புறேன். மறுபடியும் அன்புக்கு நன்றி.


Links to this post

Read Users' Comments ( 10 )

இரண்டு நாளைக்கு முன்னாடி நண்பரோட பாண்டி பஜார் ல இருக்கிற raymond's showroom
போயிருந்தேன் . இவனுக்கென்ன அங்க வேலைனு யோசிக்காதீங்க . நண்பரோட திருமணம் அவர் பர்சேஸ் . நாம சும்மா உப்புக்கு சப்பாணி . இப்டியெல்லாம் போனதானே அந்த மாதிரி இடத்தையும் பார்க்க முடியுது . (மத்தபடி கோட் , சூட் க்கு நாம பரம எதிரி )

நைட் ஒன்பது மணி . சில்லுனு ஏ சி . பின்னணியில ஹிந்தி சாங்ஸ் . நல்லாதான் போயிட்டு இருந்தது . திடீர் ன்னு தேசிய கீதம் ஒலிக்க ஆரம்பிச்சுது . மெதுவா எழுந்திருச்சி நின்னுகிட்டேன் . மனசுக்குள்ள ஒரு சின்ன சந்தோசம் . அடடா தேசிய கீதம் போட்டபின்னாடிதான் கடையை மூடுவங்கன்னு . நிமிர்ந்து பார்த்தா அவனவன் வேலையை பார்த்துட்டு இருக்கான் . எவனும் தேசிய கீதம் பாடுறத கண்டுக்கவே இல்லை. ஹிந்தி சாங்ஸ் , பாப் சாங்ஸ் வரிசையில தேசிய கீதத்தையும் டியூன் நல்லா இருக்குதுன்னு சேர்த்துட்டாங்க போல இருக்கு .

பாட்டு முடியிற வரை பொறுமையா இருந்துட்டு கல்லா கட்டிட்டு இருந்தவரை ஒரு பிடி பிடிச்சேன் . '' If you are not respecting the national anthem or if you are misuse the song it's a crime '' நான் கேட்டதற்கு எந்த பதிலும் தரவில்லை உரிமையாளர் . திரும்பவும் நான் கொஞ்சம் சத்தமா பேச '' sorry நான் கவனிக்கல '' சிரித்தபடியே சொன்னார் காந்தி நோட்டுகளை எண்ணியபடி .....


Links to this post

Read Users' Comments ( 1 )

தேர்தல் 2009 - திருநெல்வேலி தொகுதி பற்றிய எனது கண்ணோட்டம் இட்லிவடை ப்ளாக்கில் வெளிவந்துள்ளது . அதற்கான இணைப்பு .

http://idlyvadai.blogspot.com/2009/04/2009_20.html


Links to this post

Read Users' Comments ( 0 )

தேர்தல் களம் - 2009.

பரபரப்பான பேட்டிகள் , கலவரப்படுத்தும் கருத்துகணிப்புகள் , விமர்சனங்கள் , தேர்தல் அறிக்கைகள் இந்தியா முழுமையும் தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது . தேசிய கட்சிகளின் செல்வாக்கு முற்றிலுமாக சரிந்து மாநில கட்சிகள் பெரும் செல்வாக்குடன் திகழ்கின்ற இத்தேர்தல் முடிவுகள் கணிக்க முடியாதவையாகவே இருக்கின்றது .

முடிவுகள் எப்படி இருப்பினும் நமக்கு (மக்களுக்கு) தேவையான மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை . தேர்தலுக்கு முன் அமைந்த கூட்டணிக்கும் பின் அமையப்போகும் கூட்டணிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கத்தான் போகிறது .

அறுபது ஆண்டுகாலமாய் நாம் போடும் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாகவே போய்கொண்டு இருக்கிறது . நாம் விரும்பும் அரசாங்கம் , நாம் விரும்பும் மாற்றங்கள் நிகழாதவரை நாம் போடும் ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளே . இருப்பினும் இத்தவறை நாம் மீண்டும் மீண்டும் செய்துதான் ஆகவேண்டும் .

இப்பொழுது பிரச்சனையே நாம் போடப்போகும் ஓட்டுகள்தான் . இத்தனை ஆண்டுகள் நடந்த தேர்தலை பற்றிய கணிப்பில் நாம் அளிக்கும் ஓட்டின் சதவிதம் 55 - 60 வரை மட்டுமே . நாம் விரும்பும் மாற்றத்தை இந்த சதவிதம் சத்தியமாய் தரமுடியாது . மாற்றத்தை விரும்பும் பெரும்பான்மையான மக்கள் ஓட்டே போடுவதில்லை என்பதே நிஜம் .

வாக்கு சதவிதத்தை கணிசமாக அதிகரிப்பது ஒன்றுதான் மாற்றத்திற்கான முதல் வழி. அதற்கான எந்த முயற்சியையும் இதுவரை எந்த அரசாங்கமும் எடுக்கவில்லை என்பதும் நெஞ்சை சுடும் நிஜம் . வாக்குரிமையை கட்டாயமாக்கும் சட்டம் பற்றி பலர் பல குரலில் சொல்லியாயிற்று . நடக்காதது என்பதும் தெளிவாயிற்று .

ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத நல்லவர்களையும் , வாக்களிக்கவே சோம்பல்படும் உத்தமர்களையும் விட்டு விடுவோம் . இவர்கள் தவிர நிஜத்தில் ஒரு பகுதி என்னவென்றால், நம் மக்களில் வாக்கு அளிக்க விருப்பம் இருந்தும் வாக்களிக்க இயலாதவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகம் .

புரியவில்லையா...? படித்தவர்களும் , இளைஞர்களும் அதிகம் நிறைந்த நம் நாட்டில் இவர்களில் பெரும்பாலோர் வாக்களிப்பதில்லை . கிராமம் , சிற்றூர் , பேரூராட்சி , நகரம் , மாநகரம் என அனைத்து இடங்களிலும் உள்ள படித்த இளைஞர்களில் பெரும்பான்மையானோர் தனது சொந்த ஊர்களில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் வேலை நிமித்தமாக இடம்பெயர்ந்திருப்பவர்கள் .

வெளியூர்களிலும் , வெளிநாட்டினிலும் வேலை பார்க்கும் இவர்களின் சதவிதம் ஏறக்குறைய 20 - 30 வரை இருக்கும் . எத்தனை பேர்களுக்கு இவர்களில் வாக்களிக்கும் வாய்ப்பு இருக்கும் ..? குடும்ப சூழல் , நெடுந்தூர இருப்பு இன்னும் பற்பல காரணங்கள் வாக்களிக்கமுடியாமைக்கு . எங்கு போய் கொட்டுவது இவர்களின் ஓட்டுகளை ..?

பொது அடையாள அட்டை, எங்கும் வாக்களிக்கும் உரிமை, அதற்கேற்ற தெளிவான செயல் திட்டங்கள், வாக்களிக்கும் அவசியம் பற்றிய சிறந்த பிரச்சாரம். நிச்சயம் மாற்றத்திற்கான முதல் விதை விதைக்கப்பட்டுவிடும் . இதற்கு அடுத்த கட்டமாக வாக்களிக்காத மற்றொரு பிரிவினரை வாக்கு சாவடிக்கு வரவழைக்கும் திட்டமாக இருக்கவேண்டும் .

பெண்கள் , முதியோர் இவர்கள் பெருமளவில் வாக்குசாவடிக்கு வந்து வாக்களிக்கும் வகையில் ஒருசில வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் . வாக்களிக்கும் உரிமை , தேவையற்ற பயம் இவற்றுக்கான விளக்கங்கள் சிறந்த முறையில் பிரசாரப்படுத்தவேண்டும் .

முதன்முறையாக வாக்களிப்போரின் எண்ணிக்கையும் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமானவையாக இருக்கும் . இவர்களை வாக்குசாவடிக்கு வரவழைக்கும் பொறுப்பும் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் .

படிப்படியாக இவற்றை சாத்தியமாக்கும் முயற்சி இருந்தால் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை , வலிமையான இந்தியாவை சினிமாவில் மட்டுமின்றி நேரிலும் காணலாம் .

நடக்கவே நடக்காது - என்று தெரிந்தும்
பிரயாசையுடன் ,
வாக்களிக்க வக்கற்ற ஓர் அப்பாவி இந்தியன் .


Links to this post

Read Users' Comments ( 3 )

உதவி இயக்குனர்


*நிஜங்களை இருட்டில்
தொலைத்துவிட்டு
கனவுகளை வெளிச்சத்தில்
தேடுபவன்.

*இவன் சூரிய உதயத்தை
எதிர்நோக்குபவன் இல்லை
புதிதாக ஒரு சூரியனையே
உருவாக்க முனைபவன்.

*மற்றவர்களுக்கு
அவர்களது தொழில் - ஒரு
வயிற்றுப் போராட்டம்
இவனுக்கோ - இது
வாழ்க்கை போராட்டம்.

*அம்மாவின் ஆஸ்துமா,
அப்பாவின் ரிட்டைர்மென்ட்,
தங்கையின் கல்யாணம்
இவனுடைய முதல் திரைப்பட தலைப்பு
" விடியலை நோக்கி ...".

* இவனது சோகங்கள்
பெரும்பாலும் அவனது
தாடிக்கு உள்ளேயே
புதைக்கப்படுகின்றன.

* இங்கு இவனது
மனதிற்கும்
புத்திக்கும் - இடையேயான
போராட்டத்தில்
நசுங்கிக் கொண்டிருக்கின்றன
இரத்த உறவுகள்...


Links to this post

Read Users' Comments ( 1 )

நிசப்தத்தை தேடும் நிஜம்


உள்ளுணர்வின்
மரணக்கூச்சல் ;
கட்டவிழ்ந்தொடும் ஆளுமைகள் ;
தன் நிழல் பார்த்து - தானே
குரைக்கும் நாய் போலானோம் .

அன்பே நிஜம்
நிசப்தமே அன்பு ;

இறுதிவரை
எவருக்கும் பிடிபடாமல் பெருவெளியில்
உழன்றுகொண்டிருக்கிறது
நிஜமும் ...
நிசப்தமும் ...


Links to this post

Read Users' Comments ( 2 )

அடர்ந்த காடு


அடர்ந்திருக்கும் காடு
எந்நேரமும் இருண்டேகிடக்கிறது
அங்கங்கு சிதறும் ஒளியிலும்
புதைந்தே கிடக்கும் மர்மங்கள் ;

ரசித்து உள்நோக்கையில்
மனமயங்கும் சுவாரஸ்யம்.

உட்செல்வதாய் நினைத்து
கனவிலிருக்கும் மனசு ;
நிஜமுகம் மறக்கும்
ஒன்றுமற்ற மர்மங்களுடன் ..

விடை தெரியாமலேயே இருக்கிறது
அடர்ந்த காட்டின்
இறுகிய மனம்...


Links to this post

Read Users' Comments ( 0 )


ஒரு மொக்கை படத்துக்கு இவ்ளோ பெரிய பாராட்டு பத்திரமா?
லாஜிக் இல்லாத கடத்தல் காட்சிகள். கேவலமான காமெடி , அப்புறம் பார்க்க சகிக்க முடியாத காதல் காட்சிகள், சம்பந்தமில்லாத இடைசெருகலாய்
பாடல்கள். நம்ம சூர்யாவுக்கு இது தேவையா ?

சூர்யா வோட நடிப்பு, அப்புறம் சண்டை காட்சிகள், கேமரா வொர்க்..
போதுமாங்க? மூணு மணிநேரம் உட்கார வேண்டாமா..?
முதல் பாதி ஜெமினி படம் பார்த்த மாதிரி இருந்தது . அப்புறம் நிறைய ஆங்கில படம், ஏன் ஹிந்தி கஜினி வரைக்கும் சுட்டுடாங்க.

தப்பு தப்பாய் சென்னை பாஷை பேசுறாரு. திடீர்னு தாறுமாறா இங்கிலீஷ் பேசுறாரு. ஆப்ரிக்கா காங்கோ பாஷை மட்டும் தான் பேசல சூர்யா .
முதல் பாதியில கலர் கலராய் போலீஸ் க்கு தண்ணி காட்ற சூர்யா
இரண்டாவது பாதியில போலீஸ் கூட சேர்ந்து படம் பார்க்கிற
நம்மளுக்கு கலர் கலராய் பூ சுத்துறாரு.

வழக்கம் போல லூசு குடும்பம், லூசு ஹீரோயின்,
மொக்கை வில்லன் வேற எதுவும் சொல்றதுக்கு இல்லை.

சண்டை காட்சிகளில் காமெராவும், இசையும் சூர்யா வுடன் சேர்ந்து
ஆறுதல் தருகிறார்கள். ஜெகனை மட்டும் நம்பி இருக்காமல் நம்ம
தமிழ் நாடு போலீசையும் காமெடிக்கு நல்லா பயன்படுத்தி இருக்காங்க.

இப்படி படம் தர்றதுக்கு கே வி ஆனந்த் திரும்பவும் கேமரா பக்கமும், சுபா பல்சுவை நாவலும் எழுத போயிடலாம்.

இப்படிக்கு ,
நம்பி ஏமாந்த ரசிகன் ( வழக்கம் போல..)


Links to this post

Read Users' Comments ( 3 )