
மீண்டும் எப்போது...?
தெரியவில்லை.
குற்றாலச் சாரலும்
அகத்தியர் அருவியும்
கண்களிலே இருக்கிறது.
ரீங்காரமிடும் கோவில் தூண்கள்
துள்ளி ஓடும்
தாவணிப் பெண்கள்...
ஊரின் சுவையை
நீரில் வைத்து சுழித்து ஓடும்
தாமிரபரணி
இருட்டு கடையிலும்
விசாக பவனிலும்
மணம் வீசிக்கொண்டிருக்கும்.
குறுக்குதுறை ஆறும்
படித்துறை காற்றும்
பகல் கனவாகிப்போனது.
மீண்டும் எப்போது ...?
தெரியவில்லை .
சொந்த ஊரில் பிழைக்கத் தெரியாதவனின்
ஏக்கப் பெருமூச்சு ஒவ்வொரு நகரத்திலும்-காற்றோடு கலந்துகொண்டுதானிருக்கிறது....
