வலி

வலிக்கும் போல இருந்தது

உறுதியாக தெரியவில்லை.

வலியாகவும் இருக்கலாம்.

வலி இல்லாமலும் இருக்கலாம்.

வலிக்காமலே

வலி பற்றி எண்ணி

வலி கொண்டது மனது.Links to this post

Read Users' Comments ( 0 )

உனது

அலட்சியமான
பார்வை - போதும்
என்னைப் புதுப்பிக்க....


Links to this post

Read Users' Comments ( 0 )

சேகுவேரா - கவிதை


சே

உன்னை அவர்கள்
கொன்றார்கள்
உன்
உடலைப் புதைத்த
இடத்தை கூறவில்லை
இந்த நாடே
உன்னது நினைவுச்
சின்னமாதலால்
நிகரகுவாவில்
நீ புதைக்கப் படாத
ஒவ்வொரு அங்குலத்திலும்
நீ பிறந்து விட்டாய்
" சுடு "
என்ற ஆணையால்
அவர்கள் உன்னைக்
கொன்றதாக நினைக்கிறார்கள்
அவர்கள் செய்ததெல்லாம்
ஒரு விதையைப்
புதைத்து தான்


- எர்னஸ்டோ கார்டினல் நிகரகுவா


Links to this post

Read Users' Comments ( 0 )