ஒரு கை மண்ணும், ஒரு பதிவு சாபமும்...


ஈழத்தின் சோகத்தை யாரும் அத்தனை எளிதில் மறந்துவிடமுடியாது। சிதறி தெறித்த நெருப்பு துண்டுகள் பல கோடி மக்களின் இதயத்தில் விழுந்து கனன்று கொண்டுதான் இருக்கிறது. என்ன சொல்லி என்ன செய்ய...? வெறி பிடித்த சிங்கள நாய்களுக்கும் இங்குள்ள சில அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. அவனுக்கு இன வெறி. இவனுக்கு பண வெறி., பதவி வெறி, இப்போ சினிமா பட வெறியும்.

ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் ஈழத்தின் செய்திகளை படிக்க, பார்க்க திராணி இல்லமால் போய்விடுகிறது நமக்கு பலநேரங்களில்।
தொடர்ந்த ஈழம் தொடர்பான இணைய வாசிப்பில் பகீரென்று முகத்தில் அறைந்த கவிதை ஒன்று கவிஞர் தாமரையினுடையது।
அனல் கக்கும் இவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் என்ன பதில் தர முடியும் கிழட்டு குள்ள நரிக்கூட்டங்களினால்..?


விதைக்கப்பட்ட விதை முளைத்தே தீரும்.

புதைக்கப்பட்ட உயிர்கள் மீண்டு வரும்।

கதைக்கப்பட்ட கதைகள் கதையாகவே போகும்।


உரிமைக்கான எந்த ஒரு புரட்சியும் முறியடிக்கப்பட்டதாக வரலாறு கிடையாது।
பொய்யையும் புகழ்ச்சியையும் மட்டும் வைத்து தரகு வேலை நடத்தும் அரசியல்வாதிகளுக்கும், அவர்தம் அடிபொடிகளுக்கும், நரபலி கேட்ட நரகாசுரன்களுக்கும், அவர்களின் உடைந்த சருகுகுச்சிகளுக்கு சாணை பிடித்து கொடுத்த நயவஞ்சக நண்பர்களுக்கும் சமர்ப்பணம் இக்கவிதை.


கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!

எத்தனை கொடுமைகள் செய்துவிட்டாய்

எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை வழிகளில் கெஞ்சியும் கூத்தாடியும்

காலில் விழுந்தும் கதறியும்

கொளுத்திக் கொண்டு செத்தும் தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு

இன்னும் தராத ஒன்று மிச்சம் உண்டு என்னிடம்...


பட்டினியால் சுருண்டு மடிந்த பிஞ்சிக் குழந்தைகளின்

படத்தைப் பார்த்து அழுது வீங்கிய கண்களோடும்

அரற்றிய துக்கத்தோடும் களைந்த கூந்தலோடும்

வயிரெரிந்து இதோ விடுகிறேன்

கண்ணகி மண்ணில் இருந்து

ஒரு கருஞ்சாபம்!குறள் நெறியில் வளர்ந்து

அறநெறியில் வாழ்ந்தவள்

அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்

பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்

இனி நீ வேறு, நான் வேறு!


ஏ இந்தியாவே!

ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி

குண்டுகளைக் குறிபார்த்துத் தலையில் போடவைத்த

உன் தலை சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த

எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய

இனி ஒரு நூற்றாண்டுக்கு

உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதை கண்டு

மளமளவென்று கலையட்டும்!


ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்

இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்

அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்

உங்கள் மலைகள் எல்லாம்

எரிமலைக் குழம்புகளைக் கக்கி

சாம்பல் மேடாகட்டும்!


இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...

உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு

சுற்றமெலலாம் கருகட்டும்!

எதிரிகள் சூழ்ந்து உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டு வெடித்து

சிதறிய உடல்களோடு சுடுகாடு மேடாகட்டும்!


போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்றுகூசாமல்

பொய் சொன்ன வாய்களில் புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து

அரசாட்சி செய்தீர்களே...

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்

தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...

உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து

ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!


எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி

சித்திரவதையில் சாகடித்தீர்களே...

உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த

சிங்களவன் மாளிகையில்

விருந்து கும்மாளமிட்டவர்களே...

உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்

படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!நரமாமிசம் புசித்தவர்களே...

உங்கள் நாடி நரம்பெல்லாம் நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு

புல் பூண்டு முளைக்காமல்போகட்டும்...

ஆழிப்பேரலை பொங்கியெழுந்து

அத்தனையும் கடல் கொண்டு போகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!..........


Links to this post

Read Users' Comments ( 3 )