*************************
மூன்றாம் வரிசை பெண்
என்னைப் பார்த்து முறைத்தபடி
நான்காவது தடவையாக
மாராப்பை சரிசெய்யும் பொழுதுதான்
கவனிக்கவே துவங்கினேன்
எடுப்பான அவளது மார்பகத்தை....
*************************
விலகிய சேலையில்
மழையில் நனைந்தபடி
கடக்கும் பின்னிருக்கை யுவதியின்
சலனம் தவிர்க்க
வண்டியை விரட்டினேன்
பாவம்
மழையில் நனைந்த மனம்
சேலையினுள்ளேயே கிடக்கிறது.
*************************
இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும்
டவுண் சந்தி பிள்ளையார் முக்கில்
ஒரு பக்க திறந்த மார்புடன்
அலைந்த கோட்டிகாரியின்
நினைவு தவிர்க்க முடியாததாகிறது
தெரிந்தே பார்வை தவறும் சில பொழுதுகளில்....
*************************
படித்ததில் பிடித்தது.
கையில் காசு இருந்தால்
டாஸ்மாக் பக்கம் போவான்.
இல்லையென்றால் செய்யது பீடி
குடித்துகொண்டிருப்பான்.
அதுவும் இல்லையென்றால்
கவிதை எழுதிக்கொண்டிருப்பான்.
- விக்ரமாதித்யன்.
*************************
