*************************
மூன்றாம் வரிசை பெண்
என்னைப் பார்த்து முறைத்தபடி
நான்காவது தடவையாக
மாராப்பை சரிசெய்யும் பொழுதுதான்
கவனிக்கவே துவங்கினேன்
எடுப்பான அவளது மார்பகத்தை....
*************************
விலகிய சேலையில்
மழையில் நனைந்தபடி
கடக்கும் பின்னிருக்கை யுவதியின்
சலனம் தவிர்க்க
வண்டியை விரட்டினேன்
பாவம்
மழையில் நனைந்த மனம்
சேலையினுள்ளேயே கிடக்கிறது.
*************************
இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும்
டவுண் சந்தி பிள்ளையார் முக்கில்
ஒரு பக்க திறந்த மார்புடன்
அலைந்த கோட்டிகாரியின்
நினைவு தவிர்க்க முடியாததாகிறது
தெரிந்தே பார்வை தவறும் சில பொழுதுகளில்....
*************************
படித்ததில் பிடித்தது.
கையில் காசு இருந்தால்
டாஸ்மாக் பக்கம் போவான்.
இல்லையென்றால் செய்யது பீடி
குடித்துகொண்டிருப்பான்.
அதுவும் இல்லையென்றால்
கவிதை எழுதிக்கொண்டிருப்பான்.
- விக்ரமாதித்யன்.
*************************

5 comments:
//மூன்றாம் வரிசை பெண்
என்னைப் பார்த்து முறைத்தபடி
நான்காவது தடவையாக
மாராப்பை சரிசெய்யும் பொழுதுதான்
கவனிக்கவே துவங்கினேன்
எடுப்பான அவளது மார்பகத்தை....//
இத்தனை சிக்னல் கொடுத்தும் தெரியல!
//நான்காவது தடவையாக
மாராப்பை சரிசெய்யும் பொழுதுதான்//
அப்ப மூணு முறை பார்த்திருக்கீங்க.. ஐ...ஐ!
நன்றி ராஜா... வருகைக்கு... தப்பு பண்ணிட்டு எஸ்கேப் ஆகமுடியாது போலிருக்கே..
வாலு... நீரு மட்டும் அங்க இருந்தா இன்னும் நல்லா சிக்னல் கொடுத்திருப்பீரு... நாங்க எல்லாம் ஜூனியர் தானே....
athu varaikum ethai parthu kittu iruntheenga vasanth...
Post a Comment