படித்து ரசித்தது . . .


நம் அறிமுக நாட்களில்....
மௌனங்களை பரிமாறிக் கொண்டோம்...
பின் கொஞ்சமாய் பார்வைகளும் புன்னகைகளும்...
பேச தொடங்கி... பின் நிறையப் பேசினோம்...
இதயம் வரை நீண்டது பரிமாற்றம்.

இந்நாட்களில் மீண்டும் துவங்கியிருக்கிறது...
மௌனங்களின் பரிமாற்றம்....
இம்முறை ஒவ்வொரு மௌனத்திற்கும்...
அர்த்தங்கள் கற்பிக்கிறது மனது...

கொஞ்சம் கொஞ்சமாய் பார்வைகள் தவிர்க்கப்படுகிறது...
பார்க்கும் பார்வைகளிலும் விடை தெரியா கேள்விகள்...
எந்த நிமிடமும் உதிர்ந்து விடும்...
ஒற்றை ரோஜாவின் கடைசி இதழாக...
நம்மிடையே மீதமிருக்கிறோம் நாம்...

நம்மை இணைத்திருந்த சிறகுகள்...
கனமாகிப் போனதாய் ஓர் எண்ணம்.
நேற்று வரை சுமந்த சிறகுகள்....
இன்று ஏனோ பூட்டப்பட்ட சங்கிலியாய்.

நம் சுயங்களின் சுமை தாங்காமல்...
நழுவி செல்கிறது முகமூடிகள்..
நம் உண்மை முகங்கள் பார்க்க பிடிக்காமல்..
பிரிவொன்றை எதிர்பார்த்து நாட்கள் கடத்துகிறோம்...

உனக்கும் இருக்ககூடும்...
சில காரணங்கள்..
உன்னிடமும் இருக்ககூடும்....
வலிகளை பட்டியலிடும் ஒரு கவிதை...
எனினும் அறிய விருப்பமின்றி விலகுகிறேன்...

ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உண்டு...
பிரிவின் நினைவாய் புன்னகை தந்துவிடாதே...
பின் உன் எல்லா புன்னகைகளும்...
பொய்யெனவே நினைக்க தோன்றும்.

நன்றி : சித்ரா தேவி.


6 comments:

வால்பையன் said...

இவ்ளோ நாளா எங்க தல போயிட்டிங்க!

தத்துபித்து said...

pirivin valiyai appdiye velipaduthi irukiratahu.pirivu kodumai aanathu.

shanmuga raman said...

மக்கா ! என்னடா சொல்ல..

பிரிவையும் ரசிகனுமுடெய்!

விக்னேஷ்வரி said...

வரிக்கு வரி அழகு.

வசந்த் ஆதிமூலம் said...

நன்றி வால் . இப்படி கூடவே வந்து கைய பிடிச்சி கரை ஏத்தி விடுங்க. . . தொடர்ந்து வந்து ஆதரவு கொடுங்க.

வசந்த் ஆதிமூலம் said...

தத்து பித்து , விக்னேஷ்வரி வருகைக்கு நன்றி . ராம் நல்லாயிருக்கீங்களா . .?