பேனா முனையில் . . .


வலைப்பூ என்ற வார்த்தையையே எட்டு மாதங்களுக்கு முன்பு வரை தெரியாதவனாகத்தானிருந்தேன். இப்பொழுது வரை ஒரு . . . ம் எழுதி கிழித்துவிடவில்லை.

ஏதாவது எழுத வேண்டும் என்ற எனது கொடூரமான சுய விருப்பத்திற்காகவும், உருப்படியாக செய்ய வேறு வேலை எதுவும் இல்லாத காரணத்தினாலும் (இப்பொழுது வரை . . ) கிறுக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை எண்ணத்திலும் எழுத்திலும் ஒரு மன்னாங்கட்டியும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஆனால் எழுத வேண்டும் என்ற பைத்தியகாரத்தனம் மட்டும் இன்னும் குறைந்தபாடில்லை. (விதி . . )

கடந்த மூன்று மாதங்களில் எனது செயல்பாடுகள் குறைந்து காணப்பட்டாலும் இன்று வரை நான் தொடர்ந்து முயற்சித்து கொண்டிருப்பதற்கு முழுமையான முதற் காரணம் சக பதிவர்கள் மட்டுமே . . . பல சமயங்களில் லேசான பொறாமை கலந்த பிரமிப்புடன் இவர்களை வசிக்கும் அனுபவமே என்னை மேலும் மேலும் எழுதி இயங்க செய்து உங்களை மேலும் இம்சைபடுத்த வைக்கிறது.

நன்றி நண்பர்களே . . .

என்னதான் அடக்கி வாசித்தாலும் இதுவரை ஐம்பது பதிவுகள் நான் எழுதிவிட்டேன் என்பதே எனக்கு சற்று போதை தரும் விஷயம் தான்.
இந்த போதை தலைக்கு ஏறும் முன் சக பதிவர்களின் படைப்புகள் பக்கம் ஒரு ரவுண்ட் போய்விட்டு வந்தேன் என்றால் மொத்த போதையையும் இறக்கி தலையில் நாலு எழுமிச்சை பழத்தை தேய்ச்சி '' தம்பி , நீ இன்னும் வளரணும் தம்பி '' ன்னு சொல்லி வெறியேத்தி அனுப்பிடுவாங்க.

உடனே சிலிர்த்து கிளம்புற சிங்கம் ரெண்டே நாள்ல மறுபடியும் கூண்டுக்குள்ள போய் ஓய்வெடுக்க ஆரம்பிச்சிடும் வழக்கம் போல . ( நம்ம தொழிலே இதான . . )

ஆரம்பத்திலிருந்து எனக்கு எல்லா வகையிலும் ஆதரவளித்துவரும் கேபிள் அண்ணனுக்கும், தங்களது எழுத்துகளால் என்னை இயங்க வைத்துகொண்டிருக்கும் அண்ணன்மார்கள்., நர்சிம் , அப்துல்லா , பரிசில் , அதிஷா , செல்வேந்திரன் , ஆசிப் அண்ணாச்சி , ஆதிமூல கிருஷ்ணன் , யுவ கிருஷ்ணா மற்றும் உமா ஷக்தி , தவிர இன்ன பிற அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி.

அண்ணன் சக்கரை சுரேஷ் க்கு என் அன்பு .

தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திவரும் வால்பையன் , நையாண்டி நைனா , macro , தம்பி ஷண்முக ராமன் , விக்னேஷ்வரி , தமிழச்சி , வெங்கி ராஜா , தத்து பித்து எல்லோருக்கும் என் அன்பு .

என் இம்சையை பொறுத்துக்கொண்டு என்னுடனே இருந்து என்னை ஊக்கப்படுத்தும் என் நண்பர்களுக்கும் , தம்பிகளுக்கும் என் அன்பு .


பழைய டைரி குறிப்புகள் .
( பழைய புத்தக சந்தையிலிருந்து . . . )




சில நேரம்
மானாய் துள்ளிப் போகும் !
மேகம் பொழிந்த
மழையாய் பொழியும் !
சிலபொழுது
நெருப்பாய் எரிக்கும் !
நரியாய் ஊளையிடும் .
காற்று கலைக்காத
மரமாய் மௌனிக்கும் .
இப்போது இப்படி
அப்போது அப்படி
என்று அளவிடமுடியாது !
இந்த மனசுகளே
இப்படித்தானோ . . . ?


*******************************************


கடமைக்கு குடும்பம் நடத்தி
கடனுக்கு வட்டி கட்டி
திரை முன்னால் கனவில் லயித்து
வரும் கஷ்டம் எல்லாம் சகித்து
எப்போதேனும் கொஞ்சம் சிரித்து
வெறுப்புதான் என்றாலும்
சமயங்களில்
ரசிக்கும்படியும் இருக்கின்றன
வாழ்தலின்
அவஸ்தைகள் . . . !



********************************************



கோயிலுக்கு போ என்றார்கள் .
சர்ச்சுக்கு போ என்றார்கள் .
மசூதிக்கு போ என்றார்கள் .
பார் - க்கு போ என்றார்கள் .
பீச் க்கு போ என்றார்கள் .
'' என்ன சார் ஆச்சு ..? ''
பரிவோடு கேட்டான் இஸ்திரி முருகன் .
மனக்கவலை சொன்னேன் .
மருந்து போல் ஒரு வார்த்தை சொன்னான் .
'' வீட்டுக்கு போ வாத்யாரே . . . '' .


**********************************************


9 comments:

வால்பையன் said...

//என்ன சார் ஆச்சு ..? ''
பரிவோடு கேட்டான் இஸ்திரி முருகன் .
மனக்கவலை சொன்னேன் .
மருந்து போல் ஒரு வார்த்தை சொன்னான் .
'' வீட்டுக்கு போ வாத்யாரே . . . '' .
//

பிரச்சனையே அங்க தான முருகா ஆரம்பிக்குது!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

shanmuga raman said...

50வது பதிவை தொட்டத்க்கு வாழ்த்துக்கள்

கவிதைகள் போதும்ண்ணா ..கதை பன்னாலம்ல....

Venkatesh Kumaravel said...

வாழ்த்துகள்!
எப்படி எழுதுவதாக நினைத்துக்கொண்டாலும், எழுதுங்கள். அது போதும்.

தத்துபித்து said...

"50"kku valthukkal.
.
kavithai varthaiku varthai manathai thodukirathu.
.
என் இம்சையை பொறுத்துக்கொண்டு என்னுடனே இருந்து என்னை ஊக்கப்படுத்தும் என் நண்பர்களுக்கும் , தம்பிகளுக்கும் என் அன்பு .

avarkalukkum valthukal matrum nanrigal
.

வசந்த் ஆதிமூலம் said...

கரக்ட்டா சொன்னீங்க வால் . . . பலபேருக்கு பிரச்சினையே வீடு தான் . அதுவும் கல்யாணம் ஆயிடுச்சுன்னா வீடு மட்டும் தான் பிரச்சினையே....

வசந்த் ஆதிமூலம் said...

நன்றி வெங்கி, உங்களோட அன்பிற்கும் பொறுமைக்கும் . . .

வசந்த் ஆதிமூலம் said...

தத்து , ஷண்முகா இருவருக்கும் என் நன்றிகள்.

விக்னேஷ்வரி said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

வாழ்தலின் அவஸ்தைகள் நல்லாருக்கு.

மாரியப்பன் said...

nice nea