உடைந்த சிகரெட் துண்டுகள்
நிறைந்திருக்கும்
எனது அறையின் ஜன்னல் சுவரில்
தினமும் வந்தமரும் காக்கைக்கு
எப்படி தெரியும்..?
பலநேரத்து உணவின்
எச்சம் அவையென்பது . . . ?
******************************
நிகழ்ந்திருக்கவே கூடாத
உன்னுடனான இந்த சந்திப்பின் பாதிப்பை
இரண்டு குளிர்ந்த பீர் பாட்டில்களால்
சரிசெய்துவிடமுடியாதுதான்.
இருப்பினும்,
இதுபோன்ற சமயங்களில் நிகழும்
தவறுகள் அழகானதாகிறது எனக்கு.
மறுநாள் காலையில்
குற்றவுணர்ச்சி மனதை கொத்திப்பிடுங்க
ஒருபோதும் நேர்ந்ததில்லை
மலச்சிக்கல்.
******************************
முகம்தெரியாத பின்னிரவில்
அவளுடன் நெருங்கி களித்த
ஒருநாள் இரவை
ஞாபகப்படுத்தியபடியே
இருக்கிறது
எனது குளியலறை சுவரில்
ஒட்டிக்கொண்டிருக்கும்
ஒற்றை கரப்பான்பூச்சி
உடல் முழுவதும் குறுகுறுத்தபடி
விரட்டவே முடியாமல் . . .
******************************
கடைசி கவிதையில் பொருளில் குற்றம் உள்ளதென வாதாடி திருத்தம் செய்ய வைத்த தம்பி மாரியப்பனுக்கு நன்றி.

17 comments:
முதல் கவிதை அற்புதம்!
நன்றி வெங்கி. வாழ்த்த மட்டும் இல்லாமல் திட்டுவதென்றாலும் சத்தமாக திட்டுங்கள்.
உன்கிட்டயும் விஷயும் இருக்குடேய் ....
நல்ல கவிதை
உடைந்த சிகரெட்டு துண்டுகள்
ஏன் ?
அணைந்த சிகரெட்டு துண்டுகள் இல்லையா?
சிகரெட் ஐ பலர் உடைத்து அணைப்பதே வழக்கம் என எண்ணினேன். (என் போலவே.....!)
நன்றி நேசமித்ரன் முதல்தடவையா நம்ம கடை பக்கம் வந்ததுக்கு...
நன்றி ராம். தொடர்ச்சியான பார்வைகளுக்கும், கருத்திற்கும்.
நல்லா இருக்கு கவிதை எனக்கு பதிவா சரி வேணாம் என்றால் விடவா போறிங்க
பார்த்து ;) போடுங்க
போட்டா ஒரு பின்னூட்டம் சொல்லுங்க
வணக்கம் அண்ணா ரொம்ப நாள் காணாமல் போய் விட்டேன் மன்னிபிர்கள் எனக்கு தெரியும் .
அப்புறம் முதல் கவிதை நம்ம வறுமை மிக அழகு
இரண்டாவது அட நம்ம நட்பு அபாரம்
முன்றாவது ஐயோ காதல்
வாங்க macro . ஒரு பங்கு உற்சாகம் அதிகமாயிடுச்சு. நன்றி.
வாய்யா.. சுரேஷு... உனக்கு பதிவு இணையத்துல மட்டும் இல்ல. உன் முதுகிலும் ஒரு சில பதிவுகள் போடவேண்டியிருக்கு.
நன்றி நண்பா. நம்ம கடை பக்கம் வந்ததுக்கு.
பின்நவீனத்துவ கவிஞர் வசந்த் ஆதிமூலம் வாழ்க. ;)
அண்ணா ஒரு சிறு வேண்டுகோள்
ஏன் தாங்கள் உலக சினிமாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்க குடாது
உலக சினிமா பாவம் அதையாவது விட்டுவைக்கலாம் ன்னு நினைச்சேன்.
கேபிள் அண்ணனுக்கு போட்டியா நாமளும் சில படங்கள ஓட்டிடலாம்.
நன்றி விக்கி. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே நம்மள ரணகளமாக்கி நீங்க தான் கஷ்டப் படப்போறீங்க. ரொம்ப நன்றி வந்து பாராட்டியதற்கு.
cha cha மாப்ளே முதல் கவிதைலே கொன்னுடே போ.... But ஒழுங்கா time ku சப்ட்ரனும் ஆமா ..
வாங்க ஸாம்.. வராதவுக வந்துருக்கீக... ரொம்ப சந்தோசம். அடிக்கடி வாங்க.. கொட்டுங்க.. தட்டுங்க... முடிஞ்சா கொஞ்சம் கையும் தட்டுங்க.
Post a Comment