ரெண்டு கோல்ட் மேரி பிஸ்கட்டும் ஒரு குட் டே யும்.....

Dr. ருத்ரன், Dr. ஷாலினி இவர்களுடன் நடந்த கலந்துரையாடல் (10/05/2009) அன்றைய தினத்தை முழுமை செய்தது. Dr. ருத்ரன் அவர்களின் பேச்சினை பலமுறை கேட்டிருந்தாலும் அருகிலிருந்து ரசித்தது இது தான் முதல்முறை. ஷாலினி யின் திறமை வியப்பை தந்தது. அன்பான உபசரிப்பும், தெளிவான திட்டமிட்ட நிகழ்ச்சி அமைப்பும் பத்ரி அவர்களின் மீதான மதிப்பை பலமடங்கு உயர்த்தியது. உடனிருந்த அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் நன்றி. லக்கிலுக் மேல் எனக்கிருந்த கோபத்தை அவரிடம் தெரிவித்ததும், தாமிரா, உமா சக்தி, cable சங்கர், நரசிம், அப்துல்லா, அதிஷா போன்ற மூத்த பதிவர்களை சந்தித்ததும் பெரும் பேறு.

***************************************************************************

ஓர் ஆயிரம் ரூபாயும் ஒரு பேட் டே யும்.....

தேர்தலை மையப்படுத்தி இங்கே நடக்கிற கொடுமையை பார்க்கும் போது மனதில் மிகுந்த மனவருத்தமும் , கடும் கோபமும் எழுகிறது .
ஊடகங்களில் படித்ததையும் , கேட்டதையும் விட்டுவிடுங்கள். எனது அலுவலகத்திற்கு அருகில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்மணியிடம் இன்று காலை (13/05/2009)பேசிக்கொண்டிருந்தேன். '' என்னம்மா ஓட்டு போட்டிங்களா? '' என்றதுக்கு , அவர் மிகுந்த கோபத்துடன், ''இல்லை, நான் ஓட்டு போடப்போவதில்லை''. என்றார் . ஜனநாயகத்தின் மீது இவருக்கு இவ்வளவு கோபமா ? நான் , '' அப்படி சொல்லக்கூடாது. ஓட்டு போடுறது நம்ம உரிமை ''. என லெக்சர் அடிக்க ஆரம்பிக்க , '' அதெப்படி சார். எங்க தெருவில இருக்கிற எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்காங்க. எனக்கு மட்டும் கிடைக்கல.. அப்புறம் எப்படி நான் ஓட்டு போடுவேன் ..? '' . என்றார் மிகுந்த கோபத்துடன். எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டேன் . கட்சி பாகுபாடின்றி தமிழகத்தின் முக்கிய கட்சிகள் பலவும் சேர்ந்து இப்புண்ணிய காரியத்தை செய்துகொண்டிருப்பதாகவே தெரிகிறது.

தேசத்தின் ஜனநாயகம் இந்திய தெருக்களில் சில ஆயிரம் ரூபாய்களுக்கு விலை போய்கொண்டிருப்பது மட்டும் நிஜம். நிச்சயமாக இன்றைய தினம் ஒரு கருப்பு தினமே.

*************************************************************************


4 comments:

விக்னேஷ்வரி said...

நிச்சயமாக இன்றைய தினம் ஒரு கருப்பு தினமே.//

ஆமா வசந்த வெரி பேட் :(

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்த தேர்தலே ஒரு காமெடி கூத்து நண்பா.. மதுரையில் எண்ணி எண்ணி பணம் போட்ட கவரா கொடுத்துத்தான் ஓட்டு வாங்கி இருக்காங்க

வசந்த் ஆதிமூலம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர்களே...

shanmuga raman said...

ஏய் !எங்கடெய் இருக்க அளேய் கநோம்