அன்பு விசாலமாகி
காதல் விலாசமாக - மலரும் .
உன்னுடனான நம் நட்பு .
இன்றோ , நாளையோ
வரும் நாட்களிலோ . . .
மலர்ந்த பின் - பூ
அழகுதான் - ஆனால்
பூவின் அத்தனை
அழகையும் உள்ளடக்கிய
இத்தருணத்தின் - மொட்டு
பேரழகு எனக்கு .
*******************************
மெல்லிய புள்ளியாய்
வளைந்து திரும்பும் .
தூரத்து பறவை
படபடத்து அடங்கும் .
நடைமேடை நிசப்தமாகும் .
உன்னை ரயிலேற்றி விட்டு
திரும்புகையில்
உணர்கிறேன் - தனிமையின் வலியை . . .
****************************************
நீ - என்னுள் சிறிதுசிறிதாக
கரையத் தொடங்கிய
பொழுதில் - தான்
நான்
முழுமையாக
உருவெடுக்கத் தொடங்கினேன் . . . .
****************************************
எத்தனையோ நாட்கள் . . .
எத்தனையோ சொற்கள் . . .
இன்னும்
முழுமையடையாமலேயே
இருக்கிறது .
உனக்குமட்டுமேயான
எனது கவிதை . . . . .
****************************************
உலகின் அனைத்து ஜீவன்களின் மீதும்
நான் பிரியமாயிருக்க
உன் ஒருத்தியின் அன்பு மட்டுமே
போதுமானதாயிருக்கிறது .
****************************************
என்னிடமிருந்து
கண்ணீரை மட்டுமே
எடுத்துக்கொண்டு - அதை
அன்பாய் பரிமாற்றம் செய்ய
உன்னால் மட்டுமே சாத்தியம் .
****************************************
நீ என்னுடன் இல்லாத
தருணங்களில் மட்டுமே
உன்னை எண்ணிப் பார்க்கிறேன் .
நீ இல்லாமலேயே
போய்விட்டபிறகு . . . .
****************************************
உன்னை விடவும்
உனது பிரிவு
எனக்கு பிடித்தமானதாயிருக்கிறது .
****************************************
பல நாட்கள் முயன்றும்
உன்னிடமிருந்து
எதையும் பெறமுடியவில்லையே
என வருத்தத்திலிருந்தேன் .
இறுதியில் கிடைத்தது .
ஒரு சில அபத்தக் கவிதைகளும் ,
'' நாயே . . உருப்படுற வழியைப் பார் . . ''
- என்ற வாழ்த்தும் .

3 comments:
// நீ - என்னுள் சிறிது சிறிதாக
கரையத் தொடங்கிய பொழுதில்தான்
நான் முழுமையாக உருவெடுக்கத் தொடங்கினேன்.//
அழகான வரிகள் .வாழ்த்துக்கள்.
//உள்ளடக்கிய
இத்தருணத்தின் - மொட்டு
பேரழகு எனக்கு//
வெகுவாக கவர்ந்தது! தொடருங்கள்.
//உன்னால் மட்டுமே சாத்தியம்//
ஏதோ பிழை இருக்கிறது. திருத்தவும்.
நன்றி தமிழ் .
நன்றி வெங்கிராஜா
பிழையென கூறும் வரிகள் செருகப்பட்ட இடம் தவறென்று நினைக்கிறேன்.
ஊக்கப்படுத்தியதுக்கு நன்றி.
Post a Comment