பதிவர் சந்திப்பு - அறிமுகம்.

சனிக்கிழமை மாலை (25/04/09) மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே நடைபெற்ற மாபெரும் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும்படி ஆஸிப் அண்ணாச்சியும், செல்வாவும் மற்றும் இதர நண்பர்களும் வற்புறுத்தி அழைத்ததால் ஆன் த வேயில் ஒரு ஹாய் சொல்லிவிட்டு செல்லலாம் என முடிவுசெய்து வண்டியை திருப்பினேன்.

தூரத்தில் நான் வருவதை பார்த்தவுடன் அண்ணாச்சி முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அருகில் சென்றவுடன் கட்டியணைத்து மற்ற நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார் '' இவன் என் தளபதி ...'' என்று . நான் எதுவும் பேசவில்லை. சிரித்துக்கொண்டே நின்றிருந்தேன். (அவையடக்கம்...!). போதாதென்று செல்வேந்திரன் வேறு பிடித்த கையை விடாமல் பேசிக்கொண்டே இருந்தார். நந்தா அண்ணாவின் ஸ்பெஷல் அன்புக்கு என்ன கைம்மாறு செய்யபோறேன்னு தெரியலையப்பா தெரியலியே....

கார்க்கி, லக்கி, நரசிம், அப்புறம் cable சங்கர் இப்படி அண்ணன்மார் அன்புல திக்குமுக்காடி தெவங்கி போனேன். முதல் முறையா போறோமே.. கிறுக்க ஆரம்பிச்சு ரெண்டு மாசம் தானே ஆறது... என்று பயந்து போயி இருந்த எனக்கு நெறைய நம்பிக்கையும், பாசத்தையும் கொடுத்து அள்ளி அணைச்சுகிட்ட அத்தனை அண்ணன்களுக்கும் கண்ணீரோடு நன்றி சொல்றேன் . (டாய் போதும்டா... நிறுத்திக்கோ...)

- அத்தனையும் உண்மை இல்லேன்னாலும், தயங்கி தயங்கி உள்ள வந்த நம்மளுக்கு ஆதரவு கொடுத்த அண்ணாச்சி, செல்வேந்திரன், நந்தா, cable சங்கர் மற்ற எல்லா நண்பர்களுக்கும் நன்றி. துணை நின்ற ஆனந்தா-வுக்கு (தமிழ் ஊடகம்) வாழ்த்துகளும் நன்றிகளும்.

பி.கு : என்னை நல்லவன்னு நம்பி ஆஸிப் அண்ணாச்சி கொடுத்த ஒரு சில டிப்ஸ் ஐ பின்பற்றுவதா முடிவு பண்ணிட்டேன் ( உருப்படுறதுக்கு வழியே இல்லை...). முன்னோர்கள் (...!!!!??) ஆசியோடு உங்களை இம்சை பண்றதுல எந்த குறையும் வைக்க மாட்டேன்னு நம்புறேன். மறுபடியும் அன்புக்கு நன்றி.


10 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

நடத்துங்க.. அதான் நாங்க இருக்கோமே.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க.. பலரையும் கருத்துகளை பதிவு செய்யாமலே போகச் செய்துவிடும்..

வசந்த் ஆதிமூலம் said...

//நடத்துங்க.. அதான் நாங்க இருக்கோமே.!//

யாரும் ஆட்டோ அனுப்புனா அடி வாங்க பக்கத்தில இருப்பேளா...?
சொல்லுங்கோண்ணா..

Cable Sankar said...

வோர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடவும்..

வசந்த் ஆதிமூலம் said...

விட்டேன் .. நன்றி ஆதி , நன்றி cable ..

கார்க்கி said...

welcome to the blogworld..

(sorry for english)

சுப்புராசு said...

அன்பு கார்க்கி.. பதிவர் சந்திப்பின் போதே உங்களை தூர நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பல விவாத மேடைகளுக்கு உங்களை அழைக்கும் வாய்ப்பாக இதை பயன்படுத்தி கொள்கிறேன். வெல்கம் டு குட்டிசுவரு.

வசந்த் ஆதிமூலம் said...

அன்பு கார்க்கி.. பதிவர் சந்திப்பின் போதே உங்களை தூர நின்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பல விவாத மேடைகளுக்கு உங்களை அழைக்கும் வாய்ப்பாக இதை பயன்படுத்தி கொள்கிறேன். வெல்கம் டு குட்டிசுவரு.

வெயிலான் said...

அடடா! நான் பார்க்கலியே உங்களை கடற்கரையில். பரவாயில்லை. வாழ்த்துக்கள்!!!

நந்தா said...

தலை போற போக்குல என்னை அண்ணன்னு சொல்லிட்டீங்க் பார்த்தீங்களா? :(

நானும் இளைஞன் தான்பா.