லக்கிக்கு ஒரு பகிரங்க கடிதம்

அன்பு லக்கி.,

எப்போவாவது நீங்கள் போதையில் பதிவு எழுவது ஓகே. எப்பொழுதும் என்றால் ஜீரணிப்பது சற்று கடினம் தான் . ஈழம் தொடர்பான கருத்துகளில் நீங்கள் எந்த ஒரு இயக்கத்தின் அடிவருடியாகவும் இருங்கள் . அது உங்கள் சொந்த விருப்பம் . பெரும்பான்மையான பதிவர்களின் கருத்தை கொச்சைபடுத்த உங்களுக்கு அருகதை இல்லை .

இங்கு யாரும் உங்களைப்போன்று இயக்கம் சார்ந்த கருத்துகளை வழிமொழிவதும் இல்லை. எந்த ஒரு கட்சிக்கும் சட்டி தூக்குபவர்களும் இல்லை. அய்யா ஆட்சியில் இல்லாமல் அம்மா இருந்திருந்தால் இதைவிட அதிகமாகவே இந்த காமெடியன்கள் பதிவும் பின்னூட்டமும் போட்டிருப்பார்கள்.

அதிகார வர்க்கத்தினரை எதிர்த்துதான் இங்கு பதிவும், போராட்டமே தவிர எந்த ஒரு வயது முதிர்ந்த கிழவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ எதிர்த்து அல்ல. இன்று உன்னால் என்னசெய்ய முடிந்ததோ அதை சிறிது காலத்திற்கு முன்பு செய்திருந்தால் குறைந்தபட்ச சில ஆயிரம் மக்களையும் அவர்களின் ஒன்றுமறியா சிறு குழந்தைகளையும் பலியிடுவதை தடுத்திருக்கலாம். சைடு டிஷ் ஆக நீங்கள் தொடும் ஊறுகாய் அளவிற்கு உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் தடுத்திருக்கலாமா இல்லையா..?

சாதி, சாதி அலை, அபிமான சாதித்தலைவர் என்று வலைப்பதிவர்கள் மத்தியில் கதைப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். சாதி என்ற வார்த்தையை பயன்படுத்துவதையே ஈனச் செயலாக கருதுகிறேன். இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி உங்களை மேலும் தாழ்த்தி கொள்ளாதீர்கள்.

கடந்த மூன்று வருடங்களாக எங்களை கவனித்து வந்ததெல்லாம் போதும். கடந்த மூன்று மாதங்களாக வன்னியிலும் , யாழ்ப்பாணத்திலும் நடந்ததை கவனித்தீர்கள் என்றால் இப்படி போதையில் பிதற்றமாட்டீர்கள்.

கலைஞரை எதிர்த்தவர்கள் எல்லோரும் ‘ஜெ.வுக்கு தான் ஓட்டு’ போடுவார்கள் என்றோ, 'ஜெ.வுக்கு தான் ஆதரவளிக்கிறார்கள்' என்றோ நீங்கள் எண்ணினால் ''நீங்க கொஞ்சம் வளரணும் தம்பி''. எந்த செல்வியும் யாருக்கும் நாயகியாக தெரிகிறாரோ இல்லியோ... இங்கே உள்ள நாயகன் பலருக்கும் காமெடியனாக அல்லவா தெரிகிறார். மருத்துவர் அய்யாவைப்பற்றி குறிப்பிட்டு உங்களுக்கு பதிலளித்துகொண்டிருக்கும் இந்த பாவத்திற்கு மேற்கொண்டு மேலும் பாவம் சேர்க்க விரும்பவில்லை.

எந்த ஒரு உண்மையான தமிழனுக்கும் இருக்கக்கூடிய உள்மன ஆசை ஈழத்தில் அமைதி பிறக்கவேண்டும் என்பது மட்டும்தான்.

போர்நிறுத்தம் என்பது ஈழத்தமிழனுக்கும், அமெரிக்காவிற்கும், பிரிட்டனுக்கும் கிடைத்த வெற்றி என்றோ, இல்லை வேறு எவருக்கோ கிடைத்த வெற்றி என்றோ மடத்தனமாக உளற எவரும் தயாராக இல்லை. உண்மையில் போர்நிறுத்தம் என்பது வெறும் கண்துடைப்பு . ஏறத்தாழ தமிழீழ மொத்த மக்களும் போரின் அகோரப்பிடியில் சிக்கி நசுக்கப்பட்டுள்ளர்கள். இன்னும் ராணுவத்தின் பிடியில் உள்ள மக்கள் கடுமையான சித்திரவதைக்கும், வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

செஞ்சிலுவை சங்கத்தினரை கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்ப மறுக்கும் இலங்கை அரசின் போர்நிறுத்தம் இந்திய அரசின் தேர்தலை வைத்து பின்னப்பட்டிருக்கும் மாயவலையாககூட இருக்கலாம்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைப்பற்றிய இந்நேரத்து உங்களது விமர்சனம் ஒரு தேர்ந்த இந்திய அரசியல்வாதியினுடையது. இதற்கு மேலும் உங்களைப்பற்றி உயர்வாக கூற ஏதும் இல்லையென நினைக்கிறேன். மே 16 ன் முடிவுகள் எப்படியிருப்பினும் என்மக்களை காப்பற்ற எவரும் முன்வரப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

எனது இந்த சிறிய விளக்கத்திற்கு நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்ட 'பெரும்பான்மையான' வலைப்பதிவர்களின் - என்ற சொல்லும் காரணமாக இருக்கலாம்.

முழு நேர கொ.ப.செ ஆக இருப்பதை தவிர்த்து சிறிதுநேரம் உருப்படியான விசயங்களில் கவனம் செலுத்துவது அனைவரது நேரவிரயங்களை தவிர்க்கும் என்பது லக்கிக்கு எனது தாழ்மையான விண்ணப்பம்.

பி.கு : 1. நிறைய தண்ணீர் (நீங்கள் வழக்கமாக அருந்தும் தண்ணீர் அல்ல..) குடிப்பதும் ,
2. ஒரு பெரிய எலுமிச்சை பழத்தை அவ்வப்போது தலையில் தேய்த்து கொள்வதும் இந்த கோடையில் ஏற்படும் கடும் சூட்டை தவிர்க்க பயன்படும் .

தோழமையுடன் ,
வசந்த் ஆதிமூலம் .


9 comments:

வால்பையன் said...

இங்கே வரும் பின்னூட்ட விவாதங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த பின்னூட்டம்

ஜோசப் பால்ராஜ் said...

நச்ச்ச்ச்ச்ச்ச்ச்.

வசந்த் ஆதிமூலம் said...

வால்பையன் - நல்வரவாகட்டும்.

ஜோசப் பால்ராஜ் - நன்றி.

Saravanan said...

லக்கிலுக், அவரோட கட்சி மாதிரியே கொஞ்சம் ஏமாற்றி பார்க்கிறார் எல்லாரையும்...

அது போல, ஒவ்வொரு கட்சியையும் சேர்ந்தவர்கள், அவர்களை நியாயம் கற்பிக்கும் விதத்தில் தங்கள் பதிவுகளை போட்டு இருக்கிறார்கள், என்றாலும்....

உண்மை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் அறிவர்.....என்ன நடந்தது...எதற்க்காக நடந்தது என்பது பாமரனுக்கும் தெரிஞ்சது தான்...

Anonymous said...

லக்கிலுக் என்னும் பொறம்போக்குக்கு இவ்வளவு முக்கியத் துவம் தேவை இல்லை. அவன் கூஜா தூக்குவதற்காகவே பிறந்தவன். அவன் மூஞ்சியும் அவன் நாத்தம் புடிச்ச பதிவும். அவனைக் கண்டுக்காம போங்க. 10 லட்சம் ஹிட்டுகள் தாண்டிய வலைப்பூவாம். ங்கோத்தா. ஹிட் கவுண்டர்ல எவன் வேணாலும் விரும்பிய எண்ணிக்கையை போட முடியும். அவனோட மொத்த விசிட்டர் எண்ணிக்கையும் பேஜ் வியூவும் பாருங்க. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கும். இவன் சரியான அய்யோக்கியன்.

Anonymous said...

''நீங்க கொஞ்சம் வளரணும் தம்பி''

லக்கிய பத்தி நான் நினைச்சத சொல்லீட்டிங்க . . . .

அவருக்கு அம்மா பாசம், அப்பா பாசத்த விட, திமுக பாசம் அதிகம்.
அதை ஊட்டி வளர்த்தது அவர்கள் பெற்றோர் தான். லக்கி பதிவுகளை இரண்டு வருடமாக படித்துக் கொண்டிருப்பதால் சொல்கிறேன்.

வசந்த் ஆதிமூலம் said...

லக்கிக்கான இக்கடிதம் அவரின் ஒரு குறிப்பிட்ட பதிவிற்கான எனது எதிர்ப்பு அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. பல்வேறு விமர்சனங்களை கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி.

விக்னேஷ்வரி said...

உங்களுடைய நியாயமான கோபத்தை கொப்பளிக்கும் வார்த்தைகளில் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் வசந்த் ஆதிமூலம்.

வசந்த் ஆதிமூலம் said...

நன்றி விக்னேஷ்வரி .