உதவி இயக்குனர்


*நிஜங்களை இருட்டில்
தொலைத்துவிட்டு
கனவுகளை வெளிச்சத்தில்
தேடுபவன்.

*இவன் சூரிய உதயத்தை
எதிர்நோக்குபவன் இல்லை
புதிதாக ஒரு சூரியனையே
உருவாக்க முனைபவன்.

*மற்றவர்களுக்கு
அவர்களது தொழில் - ஒரு
வயிற்றுப் போராட்டம்
இவனுக்கோ - இது
வாழ்க்கை போராட்டம்.

*அம்மாவின் ஆஸ்துமா,
அப்பாவின் ரிட்டைர்மென்ட்,
தங்கையின் கல்யாணம்
இவனுடைய முதல் திரைப்பட தலைப்பு
" விடியலை நோக்கி ...".

* இவனது சோகங்கள்
பெரும்பாலும் அவனது
தாடிக்கு உள்ளேயே
புதைக்கப்படுகின்றன.

* இங்கு இவனது
மனதிற்கும்
புத்திக்கும் - இடையேயான
போராட்டத்தில்
நசுங்கிக் கொண்டிருக்கின்றன
இரத்த உறவுகள்...


1 comments:

Cable Sankar said...

நல்ல கவிதை..